கொரோனா எதிரொலி: திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (09:11 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை தடுக்க முடக்கப்பட்டுள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள், ஷாப்பிங் மால்களை மூட உத்தரவிட்டுள்ளதால் பட வெளியீடுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மார்ச் 29ம் தேதி திமுக-வின் கட்சி பொது செயலாளர் மற்றும் பொருளாளருக்கான தேர்தல் நடைபெற இருந்தது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகத்தில் அமலில் இருப்பதால் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற இருந்த பொது நிகழ்ச்சிகள், கூட்டங்களையும் ஒத்தி வைக்க மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எவ்வளவு திட்டினாலும் காங்கிரஸ் வெளியே போக வாய்ப்பு இல்லை.. திமுக கூட்டணி தான் கதி.. அரசியல் விமர்சகர்கள்..

தனித்தே போட்டியிடுவோம், மக்கள் நம்பினால் ஆட்சி, நம்பாவிட்டால் நஷ்டம் எதுவும் இல்லை.. விஜய் முடிவு இதுதானா?

ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்.. தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

மெட்ரோ ரயில் நிலையத்தில் குழந்தை பெற்ற பெண்.. பயணிகள் மத்தியில் பரபரப்பு..!

விஜய் தம்பி பார்த்து பேச வேண்டும், அவர் அரசியலுக்கு புதுசு, திருந்திவிடுவார் என நினைக்கிறேன்: குஷ்பு

அடுத்த கட்டுரையில்
Show comments