Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ விலை போய், மற்றவர்களை பலியாக்கிவிட்டார்: திமுக கடும் தாக்கு

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (10:29 IST)
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வாளாடியில், திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


 
 
அப்போது பேசிய அவர், “என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜதந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது” என்று கூறியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, வைகோவின் உண்மை முகம் வெளியே வந்துவிட்டது என பலர் விவாதித்து வந்தனர். இந்நிலையில் வைகோவின் இந்த பேச்சு குறித்து திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
 
அவரும் விலை போய், மற்றவர்களையும் பலியாக்கி, கூட்டணி கட்சிகளையும் பலியாக்கி விட்டார். அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டது தான் ராஜதந்திரம் என்றால் ராஜதந்திரத்துக்கு இதைவிட ஒரு கீழான விளக்கத்தை யாராலும் தரமுடியாது. வைகோவின் பேச்சுக்கு எனது இந்த பதிலே போதுமானது என்றார் அவர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments