Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் நீடிக்கும் குழப்பம்.. தொகுதி எண்ணிக்கை-சின்னம் பேச்சுவார்த்தையில் இழுபறி..!

Mahendran
புதன், 6 மார்ச் 2024 (12:35 IST)
திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ், மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளுமே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் பேச்சுவார்த்தை குழப்பத்தில் இருப்பதாகவும் கூறியிருப்பதாக தெரிகிறது. 
 
காங்கிரஸ் கட்சியை 10 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில் திமுக அதிகபட்சமாக 7 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று கூறிவிட்டதாம். மேலும்  டெல்லி மேலிடத்தில் நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்று திமுக தலைவர் சொன்னதும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாம். 
 
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகள் என உறுதியாக உள்ளது. அதில் 2 தனித்தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத் தொகுதி என்பதில் உறுதியாக இருக்கிறதாம். ஆனால் திமுக இரண்டு தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்றும் வேண்டுமானால் அதில் ஒரு தொகுதி பொதுத்தொகுதி தருகிறோம் என்றும் கூறி வருகிறதாம். இதை ஏற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகள் என கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்தாலும் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகள் கிடைக்காது என்று திமுக கூறியிருப்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது மொத்தத்தில் திமுக கூட்டணியை பேச்சுவார்த்தை குழப்பத்தில் நீடித்து வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments