Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரத்துல திமுகவும் அதிமுகவும் ஓவரா நடிக்குறாங்க; விஜயகாந்த் அதிரடி

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (11:46 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விவகாரத்துல திமுக வும், அதிமுகவும் அப்பட்டமாக நடிக்கிறார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த அதிரடியாக தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கானது வரும் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே, திமுக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, அனைவரும் சென்று சித்தராமையாவிடம் போய் முறையிட்டால் தீர்வு எட்டப்படும். ஸ்டாலின்  நடைபயணம் மேற்கொள்வதற்குப் பதிலாக,  டெல்லிக்கும் கர்நாடகாவுக்கும் சென்றாலே போதும். அதை விட்டுவிட்டு திமுக வும் அதிமுகவும் உண்ணாவிரதம், போராட்டம் என்ற பெயரில் டிராமா செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என கேப்டன் காட்டமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments