Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய் செத்த கட்சி... முக்கிய கட்சியால் ஒதுக்கப்படும் தேமுதிக !

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (09:00 IST)
தேமுதிகவிடம் அதிமுக வளிய சென்று பேசாது எனவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன. 

 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
அந்த வகையில் அதிமுக - தேமுதிக ஆகிய கட்சிகள் பங்கீடு குறித்து சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நேற்று மாலை 6:30 மணிக்கு அதிமுகவினருடன் தேமுதிகவினர் நடந்த இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
 
தேமுதிக பாமகவுக்கு இணையாக சீட், எம்பி சீட், தேர்தல் செலவுக்கு ஒரு பெரிய தொகை கேட்டு பிடிவாதம் பிடிப்பதாலும் அதிமுகவிற்கு இது சரிவராது என்பதாலும் நேற்றைய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாகவும், இனி தேமுதிகவிடம் அதிமுக வளிய சென்று பேசாது எனவும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன. 
 
விஜயகாந்த் தற்போது அரசியலில் ஆக்டிவாக இல்லாமல் இருப்பதால் அந்த கட்சியை பிரேமலதாவும் சுதீஷும் கண்டபடி நடத்தி வருவதாக கட்சியில் இருப்பவர்கள் அதிப்தி தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

எந்த தொகுதியில் ராஜினாமா..! ராகுல் காந்தி இன்று அறிவிப்பு.?

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை.. எதிர்கட்சி என்பதால் தப்பா பேசக்கூடாது! – பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்..!

எச்சரிக்கைக்கு எந்த பயனும் இல்லை.. திருவொற்றியூரில் மாடு முட்டி பெண் உள்பட 2 பேர் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments