Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுடன் கூட்டணி இருக்கா? இல்லையா? முடிவுக்கு வரும் விஜயகாந்த்!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (11:04 IST)
அதிமுகவுடன் இந்த தேர்தலுக்கு கூட்டணி இருக்கா இல்லையா என விஜய்காந்த் முடிவு செய்ய உள்ளார். 
 
வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக ஏற்கனவே தனது தேர்தல் பரப்புரையை துவங்கியுள்ளது. ஆம், உதயநிதி ஸ்டாலின் 100 நாள் பரப்புரையில் பிசியாக உள்ளார். 
 
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். ஆனால், தேமுதிக இருக்குமா என கேள்வி எழுந்துள்ளது. எனவே, நாளை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் நாளை (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
 
இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார். இதில், வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியை தொடர்வதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என முடிவு எடுக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments