விஜயகாந்திற்கு கொரோனா உறுதி.. ஆனால்..! – தேமுதிக விளக்கம்

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (09:31 IST)
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருந்ததாக தேமுதிக தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்த நிலையில் தேமுதிக தலைமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பும் சின்ன அளவிலேயே இருந்ததால் அது குணப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது விஜயகாந்த் பூரண நலத்துடன் உள்ளதாகவும் தேமுதிக தலைமை விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments