இவர்களுக்கெல்லாம் தூக்கு தண்டனைதான் சரி – விஜயகாந்த் அதிரடி

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (11:09 IST)
”குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்வு” என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ம் ஆண்டு கோவையில் முஸ்லீம் சிறுமி மற்றும் சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் மனோகரன் என்பவருக்கு தூக்கு தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் “கோவையில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தணடனை அளித்திருக்கிறது. இதை வரவேற்று உச்ச நீதிமன்றத்திற்கு தேமுதிக சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எங்கும் நடக்காத வண்ணம் போக்சோ சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் தேமுதிக சார்பில் வரவேற்கிறோம். குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனைதான் சரியான தீர்வு” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்