தேமுதிக ஒரு கட்சியல்ல, பணத்திற்காக நடத்தப்படும் ஒரு கம்பெனி: சந்திரகுமார்

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (06:16 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சந்திரகுமார், தேமுதிக மீதும் பிரேமலதா மற்றும் சுதீஷ் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
 
தேமுதிகவின் அனைத்து முடிவுகளையும் பிரேமலதாவும் சுதீஷும் மட்டுமே எடுத்து வருவதாகவும், இருவருக்கும் கொள்கை எல்லாம் கிடையாது, ஒரே குறிக்கோள் பணம் தான் என்றும் சந்திரகுமார், பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
தேமுதிக ஒரு காலத்தில் கட்சியாக இருந்தது என்றும், ஆனால் தற்போது பணத்திற்காக நடத்தப்படும் ஒரு கம்பெனி போல் செயல்படுவதாகவும் கூறிய சந்திரகுமார், அதிமுகவிடம் அதிக பேரம் பேசுவதற்காக திமுகவிடம் கூட்டணி சேர்வது போல நாடகமாடியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சந்திரகுமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு தேமுதிக நிர்வாகிகள் என்ன பதில் அளிக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments