Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீரடி சாய்பாபா கோவிலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் ஆன்மீகப் பயணம்

Webdunia
புதன், 17 ஜூன் 2015 (00:32 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன், திடீர் ஆன்மீகப் பயணமாக சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றார்.


 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆன்மீகத்தில் மிகவும் நம்பிகையுடையவர். இந்நிலையில், விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ், அவரது மனைவி, குழந்தைகள் ஆகியோருடன் திடீர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்.
 
சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு சென்ற விஜயகாந்த் குடும்பத்தினர், அங்கிருந்து புகழ் பெற்ற சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள். பின்பு, அங்கிருந்து ஜூன் 17ஆம் தேதி  சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
 
சமீப காலமாக தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அரசியயல் ரீதியாக சில சோதனைகள் இருப்பதாலும், அதை தடுக்கும்விதமாகவும், தனது நீண்ட நாள் விருப்பமான சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றுள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

Show comments