Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த தீபாவளி ரயில் டிக்கெட்

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (09:48 IST)
பண்டிகைகள் வந்து விட்டாலே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வந்தால் போதும் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.


 
 
பெரும்பாலும் நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் ரயிலை தேர்ந்தெடுப்பது தான் வழக்கம். இந்நிலையில், தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 27-ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
 
இந்த முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 5 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் நேரடியாக  முன்பதிவு செய்வதற்காக வந்திருந்தனர்.
 
ரயில் நிலையங்களில் நேரடியாக வந்து முன்பதிவு செய்ய குறைந்த பயணிகளே வந்திருந்தனர். ஆனால் பெரும்பாலான பயணிகள் ஆன்லைன் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால் 5 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தன.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments