Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா குழப்பத்திற்கும் சசிகலாவே காரணம் - திவாகரன் பகீர் பேட்டி

Webdunia
ஞாயிறு, 28 அக்டோபர் 2018 (13:31 IST)
தற்போது தமிழக அரசியலில் நடக்கும் அனைத்து குழப்பத்திற்கும் சசிகலாவே காரணம் என அவரின்  சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

 
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர்.
 
திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் நேற்று கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அந்த அழைப்பை தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் நிராகரித்துவிட்டனர்.
 
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன் “தற்போது நடக்கும் எல்லா குழப்பத்திற்கும் சசிகலாவே காரணம். அவர் செய்த ஒன்றும் விளங்கவில்லை. தினகரனை துனை பொதுச்செயலாளராக நியமித்து சென்றார். தற்போது தினகரனால்தான் அதிமுகவே பிளவு பட்டு நிற்கிறது” என காட்டமாக பேட்டிகொடுத்துள்ளார்.
 
ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவர் இப்படி பேசியுள்ளார். அதை பொருட்படுத்த தேவையில்லை என தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பண்ணியிருப்பார்.. மாணவி வன்கொடுமையில் சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்!

கொட்டும் மழை.. 20 மணி நேரத்திற்கும் மேலாக தரிசனத்திற்கு காத்திருக்கும் திருப்பதி பக்தர்கள்!

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments