Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காது: கருத்து கூறிய சசிகலா சகோதரர்

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (08:57 IST)
தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். நேற்று தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், 'காவிரி நீர் விவகாரத்தில் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். காவிரி நீர் குறித்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே தமிழகத்திற்கு பாதிக்கப்படும் வகையில் தான் வந்துள்ளது. இருப்பினும் கொடுக்கப்பட்ட தீர்ப்பாவது நிறைவேறுமா? என்றால் அது சந்தேகம்தான். மொத்தத்தில் காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காது என்று கூறியுள்ளார்.

மேலும் டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு வந்த தீர்ப்பு போல தமிழகத்திலும் 18 எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் என்று தான் நம்புவதாகவும், அந்த தீர்ப்புக்கு பின்னர் தமிழக அரசியலில் மாற்றம் இருக்கும் என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த கெடு இன்று முடிவடைவதை அடுத்து முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை செய்யவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

ரகுபதி சட்டத்துறை அமைச்சரா; தி.மு.க., பேட்டை ரவுடியா? அண்ணாமலை

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்.. கவுண்ட் டவுன் தொடக்கம்..!

திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 8 லாரிகள்: மீண்டும் கேரளாவுக்கே செல்லும் மருத்துவக் கழிவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments