Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து கல்வி நிறுவனங்களை மூட உத்தரவு ! தமிழக அரசு அறிக்கை !

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (18:49 IST)
அனைத்து கல்வி நிறுவனங்களை மூட உத்தரவு ! தமிழக அரசு அறிக்கை !
சீனா, அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு  வந்தவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக செய்திகள் வெளியானது.இதுவரை 114 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நோயின் தாக்கத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
 
இந்நிலையில்,  14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் அவர்கள் அனைவரும் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ஐக்கிய அமீரகமான துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய 14 பேரை மருத்துவக் குழுவினர் சோதித்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரானா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
 
இந்நிலையில் தற்போது,  தமிழக அரசு, திரையரங்குகள் வணிகவளாகங்கள், அனைத்தையும் வரும் 31 ஆம் தேதிவரை மூட   மூட உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்து தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :
 
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவங்களையும், அங்கன் வாடிகள் அனைத்தும் வரும் 31 ஆம் தேதிவரை மூட உத்தரவிட்டுள்ளது.  அங்கன்வாடி குழந்தைகளுக்கு 15 நாட்களுகு தேவையான  உணவுப்பொருட்களை குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்க அங்கன்வாடி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
இதில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரியில் தொடர்ந்து இயங்கும் எனவும்  திட்டமிட்டபடி 10 ஆம் , மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் நடக்கும் எனவும் அத்தியாவசிய பணிகள் தொடரும் என  தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கூட்டங்கள், விளையாட்டுகள், தேவாலயம், மசூதிகள், கோவில்களில் , மாநாடுகள், சுற்றுலா ரிசார்டுகள், ஒன்றுகூடும் இடங்கள்,நீச்சம் குளம், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், கருத்தரங்குகள்,  ஏற்கனவே திட்டமிட்ட திருமண நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்தக்கூடது. உடற்பயிற்சி கூடங்கள்,  அரசியல் கூட்டங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளது. 
 
இதில், முக்கியமான அறிப்பான அடுத்த 15 நாட்களுக்கு மக்கள் கூடுவதை தவிர்த்து விட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதில் தவறான வதந்திகள் பொய்யான செய்திகள்  தெரிவித்தால் கடுமையான நடவடுக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசும் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய தனியார் நிறுவனங்கள் அனுமதியளிக்க வேண்டும்  அறிவுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

குவாட்ரான்டிட்ஸ்: இந்தாண்டின் சிறந்த எரிகல் பொழிவை எப்போது பார்க்கலாம்? வெறும் கண்ணால் பார்க்கலாமா?

கழிவு கொட்டிய மருத்துவமனை மீது நடவடிக்க எடுக்காவிட்டால்! கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!

சீமானும், ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் மோதலில் ஈடுபடுவது நல்லதல்ல: கார்த்தி சிதம்பரம்..!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: அண்ணாமலை வெளியிட்ட வீடியோ..!

அடுத்த கட்டுரையில்