Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் இணைகிறார் டிடிவி தினகரன்: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் மதுரை ஆதினம்

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (15:00 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் அ.தி.மு.கவும்., அ.ம.மு.கவும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி தினகரனும் இணைவது உறுதி என்றும் மதுரை ஆதினம் தெரிவித்தார். ஆனால் இதனை மறுத்த டிடிவி தினகரன் 'அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என்றூம், மதுரை ஆதினம் சொல்லும் செய்தியில் உண்மையில்லை என்றும், அதிமுகவில் இணைய சாத்தியமே இல்லை என்றும் உறுதிபட கூறி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதினம், 'அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருவதாகவும், தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் தினகரன் இணையும் காலம் வரும் என்றும் தெரிவித்தார். அதிமுகவில் இணையும் வாய்ப்பே இல்லை என்று தினகரன் திட்டவட்டமாக கூறியும் மதுரை ஆதினம் மீண்டும் அதே கருத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
வரும் மக்களவை தேர்தலில் தினகரன் பிரிக்கும் ஓட்டால் அதிமுக தோல்வி என்று தெரிய வந்தால் பொது எதிரியான திமுகவை வீழ்த்த, அதிமுக-அமமுக இணைப்பு சாத்தியம் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதிமுக-திமுக இணைப்பு தவிர வேறு எந்த இணைப்பும் சாத்தியமே என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments