Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணியில் தினகரன் கட்சியா? அவரே அளித்த பதில் இதோ..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (10:13 IST)
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜக தனியாக ஒரு மெகா கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணியில் தினகரன் கட்சி, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணையும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாஜகவிலிருந்து அழைப்பு வந்ததா பாஜக கூட்டணிகள் இணைவீர்களா என்று கேள்விக்கு  தக்க நேரத்தில் சரியான முடிவு எடுப்போம் என்று தெரிவித்தார். 
 
தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அந்த சூழ்நிலையை பொறுத்து யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வோம் என்றும் இப்போதே எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 
 
இருப்பினும் அவர் பாஜக கூட்டணி இணைய தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments