டிஐஜி விஜயகுமார் உடல் தகனம்- 21 குண்டுகள் முழங்க போலீஸார் இறுதி மரியாதை

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (20:41 IST)
கோவை சகர காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.   இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார்  தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாரின்  உடலை மீட்டு  உடற்கூறு பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு, அவர் மன அழுத்தத்தில் இருந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இவரது மறைவுக்கு முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி  காவல்துறை உயரதிகாரிகள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், டிஐஜி விஜயகுமாரின் உடல் தேனியில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், டிஐஜி விஜயகுமாரின் உடல் அடக்கம் செய்வதற்ககாக  கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க விஜயகுமார் உடலுக்கு  இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த இறுதி மரியாதை நிகழ்ச்சியில் தமிழ் நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பங்கேற்றார். அதன்பின்னர், பழைய பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள மயானத்தில் டிஐஜி விஜயகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments