Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் துணை நிற்பேன்: ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக களமிறங்கிய டிடி

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (18:29 IST)
ஹைட்ரோ கார்பன் திட்டம் நிலத்தடி நீரைக் குறைத்துவிடும். விவசாய நிலங்களை வீணாக்கும். தென்னங்குடியிலிருந்து வந்த நான், என் கிராம மக்களுக்காக துணை நிற்பேன் என்று தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

 
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு சார்பிலும், மத்திய அர்சு சார்பிலும் இத்திட்டம் பாதுகாப்பனது என தெரிவிக்கபட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தொலைக்காட்சி பிரபல தொகுப்பாளர் திவ்ய தர்ஷினி தனது டுவிட்டர் பக்கத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
   
ஹைட்ரோ கார்பன் திட்டம் நிலத்தடி நீரைக் குறைத்துவிடும். விவசாய நிலங்களை வீணாக்கி, சுற்றியுள்ள பல கிராமத்தினரின் வாழ்வாதாரத்தைப் பாதித்துவிடும். அந்தப் பகுதியின் விவசாயிகள், மக்களின் சம்மதம் இன்றி இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தக்கூடாது. 
 
விவசாயிகள் இதுபற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என நினைக்கிறேன். என் தந்தை பிறந்த பேராவூரணிக்கு அருகில் உள்ள தென்னங்குடியிலிருந்து வந்த நான், என் கிராம மக்களுக்காக துணை நிற்பேன் என கூறியுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானும், ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் மோதலில் ஈடுபடுவது நல்லதல்ல: கார்த்தி சிதம்பரம்..!

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: அண்ணாமலை வெளியிட்ட வீடியோ..!

அண்ணா பல்கலை சம்பவத்தில் மவுனம் ஏன்: தி.மு.க., எம்.பி., கனிமொழி எங்கே? குஷ்பு கேள்வி

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழை: வானிலை ஆய்வு மையம்..!

எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை: உறுதி செய்தது ஐகோர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments