தினகரனுக்கு விளம்பரம் தேடித் தர எனக்கு விருப்பமில்லை; மு.க.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (15:40 IST)
திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என டிடிவி தினகரன் கூறியதை அடுத்து அவருக்கு விளம்பரம் தேடித் தர எனக்கு விருப்பமில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து பேட்டியளித்த டிடிவி தினகரன், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
எங்கள் அணி திமுகவுடன் இணைந்துள்ளதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தலில் போட்டியிட்டால் எங்களுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி இருக்கும். ஜெயலலிதா அமர்ந்த முதலமைச்சர் பதவியில் ஓபிஎஸ் மற்றும் பழனிச்சாமி ஆகியோரை எங்களால் பார்க்க முடியவில்லை எனறார்.
 
இதனையடுத்து பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
 
திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என கூறி டிடிவி தினகரன் விளம்பரம் தேடப் பார்க்கிறார். டிடிவி தினகரனுக்கு விளம்பரம் தேடித்தர எனக்கு விருப்பமில்லை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!

ரசிகர்கள் முன்னிலையில் கபடி வீரர் சுட்டுக்கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..

அடுத்த கட்டுரையில்
Show comments