தாராபுரம் பெண் காவலர் தனது தற்கொலைக்கு மூத்த காவலர்களின் பாலியல் தொல்லைதான் காரணம் என்று கடிதம் ஒன்றில் எழுதியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய காயத்திரி என்ற பெண் காவலர் கடந்த ஏப்ரல் மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலைக்கு டி.எஸ்.பி ஜெரீனா பேகம் ஏற்படுத்திய மன உளைச்சல் தான் காரணம் என்று காயத்திரியின் கணவர் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து காவல் துறை வட்டாரத்தில் உயர் அதிகாரி திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் காயத்திரி தற்கொலைக்கு செய்து கொள்வதற்கு முன் தனது தோழி மூலம் டி.எஸ்.பி-க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் எழுதியிருந்தது,
நான் 3 மாதத்துக்கு முன் மூத்த காவலர் (ஏட்டையா) ஒருவரிடம் வட்டிக்கு ரூ.5 ஆயிரம் பணம் வாங்கிடிருந்தேன். அந்த பணத்தை என்னால் திரும்ப கொடுக்க முடியவில்லை.
ஒரு நாள் கோர்ட் வாயிலில் அந்த காவலர், எனக்கு பணம் எல்லாம் வேண்டாம், ஒரு நாள் என்னோடு இரு என்றார். பின்னர் ஒரு நாள் குடிபோதையில் என்னை பலவந்தமாக கற்பழித்து விட்டார்.
அதோடு இல்லாமல் அலங்கியம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அவருடன் சென்றால் மாதம் ரூபாய் 5000 தருவதாக கூறுகிறார், என்றார்.
எனது தற்கொலைக்கு இந்த இரண்டு மூத்த காவலர்களும் தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கடிதத்தின் தகவல் படி காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
http://tamil.webdunia.com/article/current-affairs-in-tamil/webdunia-news-avalable-in-app-116021500055_1.html