Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 12-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (15:35 IST)
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மேலூரைச் சேர்ந்த தம்பதி உரிமை கொண்டாடும் நிலையில், 2017-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் தனுஷுக்கு மேலூர் குற்றயவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


 
 
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என உரிமை கொண்டாடிவருகின்றனர். 
தனுஷின் உண்மையான பெயர் கலைச்செல்வன் எனக் கூறும் அந்த தம்பதி, தனுஷ் திருப்பத்தூரில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நடிக்கும் ஆசையில் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் தனுஷிடம் இருந்து ஜீவனாம்ச பெற்றுத் தருமாறு மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கதிரேசன் மீனாட்சி தம்பதி மனுத் தாக்கல் செய்திருந்தனர். 
மனுவை விசாரித்த நீதிமன்றம், 2017-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments