சதுரகிரியில் அமாவாசை தினத்திலும் அனுமதி மறுப்பு.. பக்தர்கள் ஏமாற்றம்..!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (11:54 IST)
சதுரகிரி மலையில் உள்ள  சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி வழிபாடு செய்வது வழக்கமாக ஒன்று.

இந்த நிலையில் இன்று அமாவாசை தினத்தில் பக்தர்கள் வருகை தந்த நிலையில்  சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சதுரகிரி மலைப் பகுதியில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதாகவும் எனவே சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் வனத்துறை என தெரிவித்தார். இதனால் அமாவாசை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் நுழைவு வாயில் காத்திருக்கின்றனர்.  

பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து வனத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.  கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments