Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் தலைமை யார்?: பதில் தெரியாத துணை சபாநாயகர்!

அதிமுகவின் தலைமை யார்?: பதில் தெரியாத துணை சபாநாயகர்!

Webdunia
சனி, 8 ஜூலை 2017 (17:13 IST)
அதிமுகவின் தலைமை யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நேரடியான பதிலை கூறாமல் மழுப்பலான பதிலை கூறிவிட்டு சென்றுள்ளார் தமிழக சட்டசபையின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக சிதறுண்டு கிடக்கிறது. ஆனால் ஆட்சி மட்டும் ஒரு புள்ளியில் எப்படியோ நடக்கிறது. தலைமை யார் என்று தெரியாமல் எம்எல்ஏக்களே குழம்பி போய் உள்ளனர்.
 
ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி, தினகரன் அணி, திவாகரன் அணி, சசிகலா அணி என அதிமுக பல அணிகளாக பிரிந்து அதிகாரப்போட்டியில் மோதிக்கொண்டு நிற்கின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த அணிகளை இணைப்பதற்கான வேலைகளும் நடக்கின்றன.
 
இந்நிலையில் தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுகவின் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
 
ஆனால் அதிமுகவின் தலைமை யார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காத அவர், அதற்கு காலம் பதில் சொல்லும் என கூறிவிட்டு சென்றார். அதிமுகவின் தலைமை யார் என்று தெரிந்து இருந்தால் அவரே சொல்லி இருப்பார். அதனால் தான் காலம் பதில் சொல்லும் என கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று லட்சம் பேர்களுக்கு பதவி.. விஜய் முடிவால் தமிழகத்தில் பரபரப்பு..!

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments