Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை 6 மணிக்குள்... ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்!

Webdunia
புதன், 31 மார்ச் 2021 (06:25 IST)
சமீபத்தில் தேர்தல் பிரசாரம் செய்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர் ராசா அவர்கள் முதல்வரின் தாயார் குறித்தும், முதல்வரின் பிறப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதாக செய்திகள் வெளியானது. இதற்கு அதிமுகவினர் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள் பெண்கள் அமைப்புகள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்
 
இதனை அடுத்து ஆர் ராசாதனது மன்னிப்பை தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆர் ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அதிமுகவினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்
 
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி, கண்காணிப்பாளர் ஆகியோரிடமிருந்து தேர்தல் ஆணையம் அறிக்கை பெற்றது. இந்த அறிக்கையின் அடிப்படையில் இன்று மாலை 6 மணிக்குள் தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆர் ராசா விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது
 
ஆ ராசா தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் என்ன விளக்கம் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments