Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டனில் குடும்பத்தோடு குடியேற நல்ல நாள் பார்க்கும் தீபக்!

போயஸ் கார்டனில் குடும்பத்தோடு குடியேற நல்ல நாள் பார்க்கும் தீபக்!

Webdunia
திங்கள், 22 மே 2017 (09:36 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் குடும்பத்தோடு குடியேற இருப்பதாகவும், அதற்கான நல்ல நாள் பார்த்து சொல்லும்படி ஜோதிடர்களுடன் ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது அண்ணன் மகன் தீபக் அங்கு தங்கியிருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் சில முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டதாக கூறப்பட்டது. பின்னர் ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிலும் அவருக்கான சில சடங்குகளை தீபக் செய்தார்.
 
அதன் பின்னர் சசிகலா அணிக்கு தனது ஆதரவை வழங்கி வந்த தீபக் சசிகலாவை சிறையில் சென்றும் சந்தித்து வந்தார். ஆனால் தினகரனின் தலைமையை தீபக் எதிர்த்து வந்தார். இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தீபக், ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாகவும், அவரது சொத்துக்கள் அனைத்தும் தனது பெயரிலும் தனது சகோதரி தீபா பெயரிலும் இருப்பதாக கூறினார்.
 
அதில் குறிப்பாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா தனது பெயரில் உள்ளதாக கூறினார். ஏற்கனவே ஜெயலலிதா இருந்த போது அங்கு தீபக்கிற்கு ஒரு அறை இருந்தது. இந்நிலையில் தீபக் தனது குடும்பத்துடன் அங்கு குடியேற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதற்கான நல்ல நாள் பார்த்து சொல்லும்படி ஜோதிடர்களுடன் அவசர ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments