Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா: வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (09:06 IST)
ஜெயலலிதாவின் இரண்டாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தீபா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று, பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.
 
இந்நிலையில் அவரது இன்று இரண்டாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக அவரது நினைவிடத்தில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டு காலை முதலே பல்வேறு மக்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
 
இதற்கிடையே அவரது நினைவிடத்திற்கு சென்ற ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக மற்றும் அமமுக தலைவர்கள் போட்டி போட்டு நினைவு ஊர்வலம் நடத்த இருக்கின்றனர். அரசியல் காரண்டங்களுக்காகவே  நினைவு ஊர்வலம் நடத்த இருக்கின்றனர். மக்கள் இவர்களின் நாடகத்தை நம்பக்கூடாது.
 
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் உண்மையாக செயல்பட்டு உண்மையை வெளிகொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments