Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதிக்கு என்ன நோய்? என்ன சிகிச்சை? : வெளியான தகவல்

கருணாநிதிக்கு என்ன நோய்? என்ன சிகிச்சை? : வெளியான தகவல்
, திங்கள், 30 ஜூலை 2018 (11:33 IST)
உடல் நலக்குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலை சீரானது என இரவு 11 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
 
கருணாநிதிக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கருணாநிதியின் இதயம், நுரையீரல் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் சீராக இயங்குகின்றன. ஆனால், அவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்.  அதற்கு காரணம் அவரது ரத்தத்தில் ஏற்பட்டிருக்கும் தொற்று எனக்கூறப்படுகிறது.
 
சீறுநீரக நோய் தொற்று காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. எனவே, நோய் எதிர்ப்பு மருந்துகள் அவருக்கு செலுத்தப்பட்டது. அதனால் அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்த பின் ரத்தம் அழுத்தம் கட்டுக்குள் வந்தது.
 
அவர் தற்போது சிறுநீரக நோய் தொற்று, நிமோனியா காய்ச்சல், வயிற்றுப்பகுதியில் நோய் தொற்று ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவரின் ரத்தத்தில் கடுமையான நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 
 
அதன் காரணமாக சுயநினைவு இல்லத நிலை, ரத்த அழுத்தம் குறைதல், மூச்சு விடுவதில் சிரமம், தோலின் நிறம் மாறுதல், ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற பாதிப்புகள் அவரின் உடலில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எமனையே ஜெயித்து மீண்டு வருவார் கருணாநிதி - வைகோ