Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதர்களுக்கு உடலில் பிரச்சனையை போல அணைக்கு மதகில் பிரச்சனை - எடப்பாடியாரின் அடடே விளக்கம்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (13:05 IST)
பருவ மாற்றத்தால் மனிதர்களுக்கு உடம்பில் காய்ச்சல் ஏற்படுவது போல வெள்ளப்பெருக்கினால் திருச்சி முக்கொம்பில் உள்ள மதகுகள் உடைந்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரளா மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. 
 
அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழமையான திருச்சி முக்கொம்பில் உள்ள அணையின் 9 மதகுகள் அடித்து செல்லப்பட்டன.
இந்நிலையில் இன்று திருச்சி முக்கொம்பில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கொம்பில் உடைந்த அணைக்குப் பதில் ரூ.325 கோடி மதிப்பில் புதிதாக கதவணை கட்டப்படும் என கூறினார்.
 
இதனையடுத்து செய்தியாளர்கள் இந்த விபத்திற்கான காரணம் குறித்து முதல்வரிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், பருவமாற்றத்திற்கு மனிதர்களுக்கு காய்ச்சல் ஏற்படுவது போல வெள்ளப்பெருக்கால் அணையின் மதகுகள் உடைந்துவிட்டது என கூறியுள்ளார்.
முதல்வரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பயங்கர கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளது. முதலமைச்சர் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார் என பலர் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments