2 நாள் மழைக்கு கிடுகிடுவென நிரம்பிய அணை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Prasanth Karthick
செவ்வாய், 20 மே 2025 (08:49 IST)

தொடர் மழை காரணமாக கேஆர்பி அணை நிரம்பி வருவதால் மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டில் வெயில் காலத்திலேயே அதிக அளவு மழை பெய்துள்ள நிலையில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

ஓசூர், கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கேஆர்பி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மே மாதத்திலேயே கடும் கனமழையும், வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது மக்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments