Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டலில் புரோட்டா சாப்பிட்ட போது கம்பி கிடந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி!

J.Durai
திங்கள், 13 மே 2024 (13:12 IST)
தேனி மாவட்டம், உப்பாரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அம்மன் ரிலாக்ஸ் ஹோட்டலில் புரோட்டா சாப்பிட போது புரோட்டாவில் கம்பி கிடந்தால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தனர்.
 
தேனி வீரபாண்டி திருவிழா 8- வில் ஆறாம் நாள் தேர்த்திருவிழா   விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த திருவிழாவிற்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பக்கத்து மாவட்டங்களான திண்டுக்கல் மதுரை விருதுநகர் ஆகிய பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த திருவிழாவை ஒட்டி தேனி வீரபாண்டி பகுதி முழுவதும் அங்கங்கே தற்காலிக கடைகள் முளைத்து இருக்கின்றது.
இதோடு நிரந்தரக் கடைகளும்  இருக்கின்றன.
 
இதில் வீரபாண்டிய அடுத்து  உப்பாரப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அம்மன் ரிலாக்ஸ் ஹோட்டலில் வாடிக்கையாளர் புரோட்டா சாப்பிட்டபோது  பாத்திரம் விளக்கும் கம்பிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர்களிடம் கேட்டபோது, கூட்டத்துல கண்டுக்காம போங்க என்று அலட்சியமாக பதில் அளித்தனர். இதைக் கேட்ட வாடிக்கையாளர்கள் கடையில் வேலை பார்க்கும் வேலை ஆட்களிடமும், உரிமையாளரும் நீங்கள் இந்த இடத்தை காலி செய்தால் நன்றாக இருக்கும் என்று எச்சரித்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இப்படி செய்கிறார்களே வாடிக்கையாளர்  வேதனையோடு  புலம்ப, அருகில் இருந்த வாடிக்கையாளர்கள் அம்மன் ரிலாக்ஸ் ஹோட்டல் உரிமையாளரையும், வேலை ஆட்களையும் சத்தம் போட்டு விட சிறிது நேரம் பரபரப்பு கிளம்பியது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? ஒரு விளக்கம்..!

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments