Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ...

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (16:32 IST)
ஊரடங்குக் காலத்தில் பணிக்கு செல்வோர் அலுவலக அடையாள அட்டை மற்றும் கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமென  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிககவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்றுப்  பரவி வருகிறது.  இந்தியாவில் இதுவரை1000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில்,இத்தொற்றைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 இ ந் நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி  முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளர்.

 தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் :

ஊரடங்குக் காலத்தில் பணிக்கு செல்வோர் அலுவலக அடையாள அட்டை மற்றும் கொரொனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

மேலும், தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி எனவும், அழகு நிலையங்கள், சலூன்கள் , துணிக்கடைகள் போன்றவற்றில் 50 % வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மாநிலத்திற்குள் & மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் பேருந்து, மெட்ரோ பயணிகளில் 50% பேர் மட்டுமே செல்ல அனுமதி; கடற்கரையில் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதி எனவும மக்கள் கூட அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments