2001ல் திமுக ஆட்சி: உதயநிதி பேச்சு குறித்து பாஜக பிரமுகர் கிண்டல்!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (08:49 IST)
வரும் 2001இல் திமுகவின் ஆட்சி என உதயநிதி பேசியது குறித்து பாஜக பிரமுகர் கிண்டல் செய்து விட்டு விட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தொண்டர்கள் அமோகமாக திரண்டு அவரது பேச்சை கேட்டு வருகின்றனர்
 
தமிழகத்தில் முதன்முதலாக திமுக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது என்பதும் அதிலும் திமுக தலைவரின் வாரிசே நேரடியாக களம் இறங்கி உள்ளதால் திமுக தரப்பில் உற்சாகமாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று கூட்டமொன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை பிடிக்கும் என்று சொல்வதற்கு பதிலாக 2001 இல் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறினார். இதுகுறித்து பாஜக பிரமுகர் சிடிஆர் நிர்மல்குமார் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலுடன் கூறியபோது, ‘2001யில் ஆட்சியமைக்க போகிறாராம் ஸ்டாலின்.." சொல்கிறார் உதயநிதி. தந்தை 8 முறை உளறினால் மகன் 16 முறை உளறுகிறார். என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

சிந்து நதிக்கு அடுத்து ரவி நதியும் இல்லை!.. பாகிஸ்தானுக்கு இந்தியா செக்!...

7 வயது சிறுமியை கொன்று பிளாஸ்டிக் பேரலில் சடலத்தை மறைத்து வைத்த பக்கத்து வீட்டுக்காரர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனி விமானத்தில் சென்றதால் பிரச்சனையா? சட்டமன்றத்தில் கடும் விவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments