Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீக் ஆன வினாத்தாள்: குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:24 IST)
முன்கூட்டியே வெளியான திருப்புதல் தேர்வு வினாத்தாள், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல். 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது தளர்வுகள் காரணமாக அன்றாடம் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது.
 
தேர்வுகள் நடந்து வரும் நிலையில் முன்னதாக 12 ஆம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மீண்டும் வணிக கணிதம் பாடத்தின் வினாத்தாள் வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் திருப்புதல் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த விசாரணையில் திருவண்ணாமலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் இருந்து தான் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
வினாத்தாள் கசிந்த  முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிகள் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே தற்போதைய தகவலின் படி முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், குற்றவாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments