Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானும் அதே ஸ்கூலில்.... ரெண்டு பெண் குழந்தைகளுக்கு - PSBB சர்ச்சை குறித்து அஷ்வின்!

Webdunia
வியாழன், 27 மே 2021 (12:48 IST)
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி யில் நானும் படித்தவன் தான் என கூறி இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கடந்த இரண்டு தினங்களாக என்னால் சரியாக தூங்க முடியவில்லை. அந்தப் பள்ளியின் பழைய மாணவனாக மட்டும் அல்லாமல் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கும் என்னால் இந்த செய்தியை ஜீரணிக்க முடியவில்லை.
 
தற்போது ராஜகோபாலன் என்ற ஒரு பெயர் மட்டுமே வெளியாகி உள்ளது. எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இது போன்ற கொடிய செயல்களை செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இது தவறுகளை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை என்று ஆதங்கத்துடன் தனது கருத்தினை காட்டமாக தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்