Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கும் போது செல்ஃபி எடுத்த சி.ஆர்.சரஸ்வதி, பாத்திமா பாபு!

ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கும் போது செல்ஃபி எடுத்த சி.ஆர்.சரஸ்வதி, பாத்திமா பாபு!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (09:19 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையில் அவரை சந்தித்து நலம் விசாரிக்க சென்ற அதிமுக நிர்வாகிகள் சி.ஆர்.சரஸ்வதி, பாதிமாபாபு ஆகியோர் செல்ஃபி எடுத்தது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதிமுகவினர் மிகுந்த உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். அவருக்காக, பிராத்தனைகள், பூஜைகள், வழிபாடுகள் என ஜெயலலிதா நலமாக இருக்க தலைமையின் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்கள் அதிமுகவினர்கள்.
 
இந்நிலையில் அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்க சென்றனர் அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி மற்றும் தலைமை கழக பேச்சாளர் பாத்திமாபாபு. அதன் பின்னர் மருத்துவமனை வெளியே வந்து அமர்ந்த அவர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர்.
 
பாத்திமா பாபு செல்ஃபி எடுக்க அவருடன் சேர்ந்து சி.ஆர்.சரஸ்வதி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல் வெளியாகி உள்ளது அந்த புகைப்படம். இதனை தனியார் வார இதழ் ஒன்றின் புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார்.
 
முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது இவர்கள் இப்படி மருத்துவமனை முன்னரே ஜாலியாக செல்ஃபி எடுக்கின்றனரே என ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments