Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவிற்கு எதிரான சசிகலா புஷ்பா வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (17:04 IST)
சசிகலா புஷ்பாவின் புகார் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி அதிமுகவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.


 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று, நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில், சசிகலா புஷ்பா மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுக மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, சசிகலா புஷ்பா மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி அதிமுகவுக்கு உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments