Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா பொதுச்செயலாளராக நீடிக்கலாம்: நீதிமன்றம் அதிரடி!

சசிகலா பொதுச்செயலாளராக நீடிக்கலாம்: நீதிமன்றம் அதிரடி!

Webdunia
சனி, 29 ஜூலை 2017 (09:29 IST)
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


 
 
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க கோரியிருந்தார்.
 
மேலும் அந்த மனுவில், சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். ஆனால் அவரது ஆலோசனையின்படி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
 
ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க சசிகலா உடன் ஆலோசித்ததாக ஆளும் கட்சி வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறது. ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஊழலுக்கு எதிரான சட்டங்களை அவமதிக்கும் செயல். எனவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நீடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கவுல் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கியதும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர்.
 
ஒருவர் தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரிடம் ஆலோசனை பெறுவதை எந்த வகையிலும் தடுக்க முடியாது. அறிவுரை கூற தகுதியானவராக இருந்தால் அவர் தண்டனை பெற்றவராக இருந்தாலும் அவரிடம் ஆலோசனை பெறுவதில் தவறு ஏதும் கிடையாது. எனவே சசிகலாவிடம் அவருடைய கட்சியினர் ஆலோசனை பெறுவதில் தவறு இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வழக்குகளில் எச் ராஜா குற்றவாளி என தீர்ப்பு.. 6 மாதம் சிறை தண்டனை..!

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. வெள்ள நீரில் மிதக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்..!

திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.. அமைச்சர் எவ வேலு

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒரே ஒரு புயல்.. மொத்த தண்ணீர் கஷ்டமும் தீர்ந்தது.. ஏரிகளின் கொள்ளளவு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments