Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிஎன்பிஎஸ்சி – தேர்வு பட்டியல் ரத்து !

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (20:46 IST)
டிஎன்பிஎஸ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான வெளியான தேர்வு பட்டியலை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக அரசு வேலைகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையம் எனும் அமைப்பு (TNPSC) நடத்தி வருகிறது. ஆனால் இந்த அமைப்பு நடத்தும் தேர்வுகளில் சமீபகாலமாக பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகின்றன.

113 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு அறிவிப்பு வெளியாகி தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் நேர்முகத் தேர்வுக்கு ஒரு பதவிக்கு 2 பேர் வீதம் அழைக்கப்படவேண்டும். ஆனால் வெறும் 33 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இது சம்மந்தமாக செந்தில் காந்த்  என்ற தேர்வர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை ஏற்று விசாரித்த நீதிபதி  33 பேரின் தேர்வு பட்டியலை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எல்லா விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களையும் சரிபார்த்து அதை டி என் பி எஸ் சி க்கு அனுப்ப வேண்டும் என மோட்டார் வாகன பராமரிப்புத் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments