Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்யும் புதிய சட்ட திட்டம்: திமுக கடும் எதிர்ப்பு

Webdunia
புதன், 22 ஜூன் 2016 (12:11 IST)
மாநகராட்சி கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்யும் புதிய சட்ட திட்டம் தொடர்பான முன்வடிவை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்தார்.


 

அந்த அறிவிப்பில், தற்போது மாநகராட்சிகளுக்கான தேர்தல் கட்சிகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. சில மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவ்வளவாக மாநகர மேயருக்கு இல்லாத காரணத்தால் மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மாநகர மேயருக்கு கிடைக்கும் பட்சத்தில் மாமன்றம் சிறந்த முறையில் செயல்படும் என்று கருதப்பட்டது. அதன் காரணமாக மாமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக மாநகர மேயரை தேர்ந்தெடுப்பது என்று அரசு முடிவு செய்து இருக்கிறது. மேற்சொன்ன முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அரசு மாநகராட்சி தொடர்பான சட்டங்களை பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வது என முடிவு செய்கிறது. இந்த சட்ட முன் வடிவு (மசோதா) மேற்சொன்ன முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்க விளைகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி,திருப்பூர், திண்டுக்கல், வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய 10 நகரங்கள் மாநகராட்சிகளாக உள்ளன. இந்த மா நகராட்சிகளுக்கான மேயர் பதவிக்கு கடந்த தேர்தலில் மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments