Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று தடுப்பூசி ஒத்திகை: சென்னையில் மத்திய அமைச்சர் ஆய்வு!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (07:54 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஒன்பது மாதங்களாக கொரோனா வைரஸ் பொது மக்களை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் இந்த வைரசுக்கு முடிவு கட்டும் வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்தது
 
இதனை அடுத்து தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழகம் முழுவதும் 190 இடங்களில் இந்த தடுப்பூசி ஒத்திகை நடைபெறுவதாகவும் சென்னையில் நடைபெறும் தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு செய்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
நாடு முழுவதும் உள்ள 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக முடிந்தால் இதனை அடுத்து பொதுமக்களுக்கு படிப்படியாக தடுப்பூசி போடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments