Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேங்காய் பொறுக்குவதில் தகராறு : நல்லசாமி என்ன செய்தார் தெரியுமா..?

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2018 (18:57 IST)
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கொன்னமரத்து அம்மன் கோயிலில்  காவலாளியாக பணியாற்றுபவர்   வடிவேல் (50). இவரது நண்பர் கந்தசாமியும்  கோயிலில் படுத்து உறங்கிவிட்டு பகலில் வியாபாரத்திற்காக வெளியே சென்று விடுவார். 
நேற்று மாலையில் கோயிலுக்கு வந்த நல்லசாமி கோயிலில் சாமிக்கு உடைத்த சிதறு தேங்காயை பொறுக்க முற்பட்டார், ஆனால் ஏற்கனவே அங்கிருந்த வடிவேலும் , கந்தசாமியும் தேங்காயை பொறுக்க வேண்டாம் என தடுத்ததாக தெரிகிறது. கீழே கிடந்த கட்டையால் அவர்களை தாக்கிவிட்டு ஓடிவட்டார்.
 
பிறகு ஆத்தாம் பாளையத்திற்கு சென்ற  சேர்ந்த நல்லசாமி அதே ஊரில் வசிக்கும் குமார் என்பவரிடம் 200 ரூபாய் கேட்டு தகராறு செய்ததுடன் , தன் கையில் வைத்திருந்த கத்தியால் கத்தியால் அவரை குத்திவிட்டு ஓடிவிட்டார்.
 
அப்போது பொதுமக்கள் அவரை சேர்ந்து பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
 
பின் போலிஸாரிடம் அவர் கூறியதவது:
 
நான் தேங்காய் பொறுக்கும் போது கோயிலில் இருந்த இருவரும் என்னை தடுத்தனர், அதனால் ஆத்திரத்தால் அவர்களை அருகில் இருந்த கட்டையால் அடித்தே இருவரையும் கொன்று விட்டேன். 
 
அதனால் ஊரிலிருந்தால் போலீஸ் பிடித்துவிடுவார்கள் என்பதால் என் ஆத்தாம் பாளையத்திலிருந்து கிளம்பி செல்வபதற்கு தயாரானேன். ஆனால் கையில் காசு இல்லாததால் குமார் என்பவரிடம் 200 ரூபாய் பணம் கேட்டேன் ஆனால் அவர் தர மறுக்கவே கையில் இருந்த கத்தியால் அவரை குத்திவிட்டு ஓடினேன். ஆனால் மக்கள் பிடித்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினதாக போலீஸார் தெரிவித்தனர்.
 
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

அடுத்த கட்டுரையில்
Show comments