Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1500 கோடி பணத்துடன் நிற்கும் கண்டெய்னர் : கரூரில் பரபரப்பு(வீடியோ)

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (15:08 IST)
ஏற்கனவே ரூ.576 கோடி பரபரப்பு அடங்குவதற்குள், ரூ.1600 கோடியுடன் கண்டெய்னர் ஒன்று கரூர் அருகே நிற்கும் விவகாரம் வெளியாகியுள்ளது.


 

 
தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் போது ரூ.576 கோடி திருப்பூரில் பிடிப்பட்டு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், தொகுதியில் தேர்தல் நடைபெறாத நிலையில் அங்கே பிடிபட்ட மேலும் இரு கண்டெயினர் லாரிகள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த தகரக்கொட்டாய் என்ற இடத்தில்  தேசிய நெடுஞ்சாலை எண் 7 ல்  கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கியின் புதிய ரூபாய் நோட்டு அடிக்கும் அச்சகத்தில் இருந்து உரிய ஆவணங்களோடு கேரள மாநிலம் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு  இரண்டு கண்டெயனர் லாரியில் தலா ரூ.550 கோடி என 1100 கோடி ரூபாய் கொண்டு செல்லும் போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஒரு கண்டெய்னர் லாரி பழுதானதால் வாகனம் நிறுத்தப்பட்டது. 
 
இதுபற்றி, உடனடியாக கரூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரூரில் இருந்து கூடுதல்காவல் துறையினர் அப்பகுதிக்கு அனுப்பபட்டனர். மத்திய பாதுகாப்பு படையினரோடு  பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ரூ.1100 கோடியோடு கண்டெய்னர் லாரி நிற்பது  கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரூ.1100 கோடி என்று ரெக்கார்டு காண்பிக்கும் நிலையில் திருப்பூரில் பிடிபட்ட கண்டெயினரைவிட இரு மடங்கு இந்த கண்டெயினர் லாரி இருப்பதால் ரூ.1500 கோடிக்கு மேல் இருக்கும் என்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். 
 
எது, என்னவோ, கண்டெயினர் லாரிகளில் பணம் பிடித்து  வரும் சம்பவம் தமிழக அளவில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

வீடியோ:
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

புதிய வருமான வரி மசோதா.. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்..!

வட்டி வசூல் செய்ய நிதி நிறுவன ஊழியருடன் ஓடிப்போன மனைவி.. பரிதாபத்தில் கணவன்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது? முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

கமல்ஹாசனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி.. மரியாதை நிமித்த சந்திப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments