Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வசந்தகுமார் இடத்தில் யார் ? – திமுக, காங்கிரஸ் இடையே போட்டி !

Webdunia
புதன், 29 மே 2019 (13:42 IST)
மக்களவைத் தேர்தலில் வென்றதை அடுத்து நாங்குனேரித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் வசந்தகுமார்.

மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தான் வகித்த நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அவரின் தொகுதியான நாங்குனேரியில் அடுத்ததாக போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தத் தொகுதி மீண்டும் காங்கிரஸுக்குக் கொடுக்கப்படுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ராஜினாமா செய்ததை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார் ‘ நாங்குனேரியில் அடுத்ததாக போட்டியிடுவது யார் என்று காங்கிரஸ் தலைமையும் திமுக வும் சேர்ந்து முடிவெடுக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸின் பேச்சாளர் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு திமுக சம்மதம் தெரிவிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் கூட திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் தானே அனைத்துத் தொகுதிகளிலும் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments