Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் எங்களை கூட்டணிக்கு அழைக்கவில்லை: கமல்ஹாசன்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (07:15 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லியில் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்ததை அடுத்து அவரது கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் கமல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் திமுக -கங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் கமல் கட்சி அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கமலஹாசன், 'காங்கிரசுடன் கூட்டணி வைப்பது என்று கூறுவதெல்லாம் தகவல் மட்டுமே, அவர்களும் அழைக்கவில்லை நாங்களும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் மத்திய பட்ஜெட் குறித்து அவர் கருத்து கூறுகையில், 'அரசு தங்களுக்காக தாங்களே தாக்கல் செய்து கொண்ட ஒரு பட்ஜெட் தான் இடைக்கால பட்ஜெட் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விமர்சனம். இந்த பட்ஜெட்டில் இருக்கும் குளறுபடிகளை பொருளாதார நிபுணர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள் என்று குறிப்பிட்டார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments