Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் கட்சியை கூட்டணியில் இணைத்து கொள்ள தயார்.. காங்கிரஸ், பாஜக அழைப்பு..!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (08:00 IST)
விஜய் கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியை எங்கள் கூட்டணியில் இணைத்துக்கொள்ள தயார் என காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு அழைப்பு விடுத்துள்ளன.
 
நடிகர் விஜய் விரைவில் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் கட்சி ஆரம்பித்தால் அவருடைய கட்சியை திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள தயார் என கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று அவர் கூறியுள்ளார். 
 
அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பேட்டி அளித்தபோது ஓட்டுக்கு காசு வாங்க கூடாது, ஊழலை எதிர்க்க வேண்டும் என்று கூறும் எந்த கட்சியையும் நாங்கள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள தயார் என்று கூறியுள்ளார். 
 
விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே அவரை தங்கள் கூட்டணியில் சேர்க்க பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு அணிகளும் முன்வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

பாம்பன் பாலம் திறப்பு எதிரொலி: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில் குறித்த அறிவிப்பு..!

பிலால் கடையில் சாப்பிட்டவர்கள் 55 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

நாளை கும்பாபிஷேகம்.. இன்று வெள்ளி வேல் திருட்டு..மருதமலை முருகன் கோவிலில் பரபரப்பு..!

வீடு கட்டுறதா சொன்னாங்க.. கடைசில பாத்தா டாஸ்மாக்! - மக்களுக்கே விபூதி அடித்த அதிகாரிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments