Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதான கார்த்திக் சிதம்பரத்திற்கு ஸ்பெஷல் கவனிப்பு!

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (22:05 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கார்த்திக் சிதம்பரம் உள்பட 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து சென்னையில் நேற்று சிபிஐ கார்த்திக் சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது. 
 
கைது செய்த கார்த்திக் சிதம்பரத்தை சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், கார்த்திக் சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசரரிக்க சிபிஐக்கு நேற்று உத்தரவிட்டது. 
 
நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு, கார்த்திக் சிதம்பரத்திடம் ஒருநாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை. இதனால் விசாரிக்க மேலும் 14 நாட்கள் காவல் தேவை என கோரிக்கை விடுத்தது. 
 
இந்நிலையில், கார்த்திக் சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சிபிஜக்கு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது சிபிஐ காவலில் உள்ள இவருக்கு சிறப்பு கவனிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
தினமும் வீட்டு உணவு கொண்டு வந்து கொடுக்க ப.சிதம்பரம் கோரியுள்ளார். இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஆனால், தேவையான மருத்துகளை மருத்துவரின் பரிந்துரைப்படி கொடுக்கலாம் என்று அனுமதித்துள்ளது. 
 
மேலும், தினமும் காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் அவரைச் சந்திக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments