+2 மாணவனுக்கு பாலியல் டார்ச்சர்: சிக்கிய கம்ப்யூட்டர் டீச்சர்!

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (18:17 IST)
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது என கூறும் இதே நாட்டில் ஆண்களும் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். 
 
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அவரது பள்ளி கம்ப்யூட்டர் டீச்சர் பாலியல் தொல்லை கொடுத்தது வெளியாகியுள்ளது. 
 
மேற்கு முகப்பேரில் உள்ள பிரபல பள்ளியில் +12 படித்து வந்த மாணவனிடம் 40 வயதான ஸ்மிதா என்ற கம்ப்யூட்டர் டீச்சர் பள்ளியிலேயே அத்து மீறி நடந்துள்ளார். இது குறித்து மாணவன் அவனது பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் பள்ளியில் புகார் அளித்துள்ளனர். 
 
இந்த புகாரின் அடிப்படையில், ஆசிரியை ஸ்மிதாவை, பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. ஆனாலும், திருந்தாதா அந்த டீச்சர் மாணவனை செல்போனில் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். 
 
இதனால், மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். டீச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்