Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வாதங்கள் நிறைவு - ஜூன் 7 தீர்ப்பு தேதி?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வாதங்கள் நிறைவு - ஜூன் 7 தீர்ப்பு தேதி?
, வியாழன், 2 ஜூன் 2016 (11:19 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
 

 
வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 
மேல்முறையீட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றத் தனி நீதிபதி குமாரசாமி, முழுமையாக ரத்து செய்தார். ஜெயலலிதாவின் சொத்துமதிப்பை குறைத்துக் கணக்கிட்டும், அரைகுறையாக விசாரணை நடத்தியும் நீதிபதி குமாரசாமி இந்த தீர்ப்பை வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
மேலும் கர்நாடக அரசு ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்பிரமணியசாமி ஆகியோர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட - நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரவர் தரப்பு இறுதி வாதங்களை விரைவாகவும், சுருக்கமாகவும் எடுத்து வைக்க உத்தரவிட்டது.
 
அதன்படி கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, க.அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவ், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி யோர் தரப்பில் மூத்த வழக் கறிஞர் சேகர் நாப்தே ஆகி யோர் வாதங்களை எடுத்து வைத்தனர்.
 
மொத்தம் 22 நாட்கள் வழக்கறிஞர்களின் வாதம் நடைபெற்றது. 23ஆவது நாளாக நேற்று புதனன்று நடைபெற்ற விசாரணையின்போது, 2 மணிநேரம் அவகாசம் கேட்டு, கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது வாதத்தைத் தொடர்ந்தார்.
 
பிற்பகலில், வருமான வரித்துறை சார்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன். இதன்பிறகு சுப்பிரமணிய சாமியும் தனது எழுத்துப் பூர்வ வாதத்தை சமர்ப்பித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தது.
 
எனினும் வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் குறித்த வழக்கை விசாரிக்க வேண்டியிருப்பதால், விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
 
அன்றைய தினம் நடைபெறும் விசாரணைக்கு பிறகு தீர்ப்பு எப்போது? வெளியாகும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கணவருக்கு மிரட்டல் வந்தன : மதனின் மனைவி பகீர் புகார்