Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் - 2 படப்பிடிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 1 கோடி இழப்பீடு !

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (17:47 IST)
இந்த ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் வழங்கியுள்ளனர்

3 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்தியன் திரைப்படம் பல இழுபறிகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. ஆனாலும் பல பிரச்சனைகளால் படப்பிடிப்பு ஆமைவேகத்தில் நடந்தது. கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், பிக்பாஸ் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் பட்ஜெட் தொடர்பாக பிரச்சனை நீடித்து வருவதாக சொல்லப்பட்டது.
 
இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த கோர விபத்தில் 3 பேர் பலியானதை அடுத்து மிகப்பெரிய சர்ச்சைகளோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியாத நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஒட்டு மொத்த திரையுலகமும்  முடங்கியுள்ளது.
 
இந்நிலையில், கொரொனா காலம் முடித்து எப்போது திரையுலகம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். 
 
இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர்  வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வில் கூறிய ஷங்கர் படப்பிடிப்பின்போது உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
 
மேலும் நடிகர் கமல்ஹசன் , இந்தியன் -2 படப்பிடிப்பு விபத்து கசப்பான பாடம், சட்டதிட்டங்களின் படி நடப்போம் என்று  தெரிவித்துள்ளார்.#Shankar #KamalHaasan | #Indian2
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments