Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரிந்த குளத்தின் கரை நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைப்பு!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (12:53 IST)
கனமழையால் சரிந்த குளத்தின் கரை நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.


நாகை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுகுதிகளை கூடுதல் தலைமைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரமேஷ் சந்த் மீனா, ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி,மீனம்ப நல்லூர், தலைஞாயிறு என 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்‌. அதன் ஒரு பகுதியாக  திருக்குவளை -எட்டுக்குடி பிரதான சாலையில் தொடர் கனமழை  காரணமாக பிள்ளையார் கோயில் குளம் மண் சரிவு ஏற்பட்டது.

நிலையில் உடனடியாக பேரிடர் கால  பராமரிப்பு பணி  நெடுஞ்சாலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.அதாவது குளத்தின் கரையை மண் மூட்டை கொண்டு அடுக்கி பலப்படுத்தி துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை கூடுதல் தலைமைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரமேஷ் சந்த் மீனா, ஆட்சியர் ஜானிடாம்வர்கீஸ், கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி,வட்டாட்சியர் சுதர்சன், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் எம்.நாகராஜன்,உதவி பொறியாளர் அ‌.உமாமகேஸ்வரி, சாலை ஆய்வாளர் ஜி.ரமேஷ்குமார் சாலை பணியாளர்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments